கடலோர காவல் படையினர் ஒத்திகை
ராமநாதபுரம் இந்திய கடலோர காவல் படை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்ப குழும போலீசார் இணைந்து சஜாக் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடுக்கடலில் மீன் பிடிக்கம் மீனவர்கள் உரிய அடையாள அட்டைகள் மற்றும் படகின் ஆவணங்களை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். பாதுகாப்பு ஒத்திகையின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நிய படகுகளின் ஊடுருவல் குறித்த தகவல்களை 1093 அவசர எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தாபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து தனுஷ்கோடி வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு பேருந்துகளில் ஏறி சோதனை செய்ததுடன் சுற்றுலா பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். பாதுகாப்பு ஒத்திகையையொட்டி ராமநாதபுர மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை, உள்ளிட்ட கடல் பகுதி முழுவதும கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக பயங்கரவாதிகள், நுழைந்த தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றதாக தெறிவிக்கப்பட்டது..