உத்தமசோழபுரத்தில் ரூ.2.84 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.2.84 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.
Update: 2024-03-28 07:32 GMT
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.72-க்கும் அதிகபட்சமாக ரூ.90-க்கும் விற்பனையானது. மொத்தம் 3.30 டன் அளவுள்ள 93 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.