பரமத்தி வேலூரில் ரூ.29 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 ஆயிரத்து 497-க்கு விற்பணையானது.;
Update: 2024-03-20 01:43 GMT
தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்திற்கு விவசாயிகள் தேங்காயை கொண்டு வருகின்றனர். இங்கு தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 798 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.26.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 22-க்கும், சராசரியாக ரூ.24.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 29 ஆயிரத்து 497-க்கு வர்த்தகம் நடைபெற்றது.