பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்திற்கு ஏலம்
பரமத்திவேலூர், பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
Update: 2024-03-14 17:30 GMT
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை உடைத்து உலர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 9 ஆயிரத்து 356 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.59 க்கும், குறைந்த பட்சமாக ரூ.76.99 க்கும், சராசரியாக ரூ.81.69 க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ.70.89 க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.99 க்கும், சராசரியாக ரூ. 66.79 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 84 ஆயிரத்து 856 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஏலத்திற்கு 9 ஆயிரத்து 376 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.88 க்கும், குறைந்த பட்சமாக ரூ.80.97 க்கும், சராசரியாக ரூ.87.49 க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ. 76.97 க்கும், குறைந்த பட்சமாக ரூ. 65.88 க்கும், சராசரியாக ரூ.72.99 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 326 க்கு வர்த்தகம் நடைபெற்றது.