கோவை பீளமேடு காவல் ஆய்வாளர் திடீர் மரணம்
கோவை பீளமேடு காவல் ஆய்வாளர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
மரணமடைந்த ஆய்வாளர்
தேனி மாவட்டம் சீலையம்பட்டி, கம்பர் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் நடேசன் (49). இவர் கோவை பீளமேடு இ-2 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சக்தி என்ற மனைவியும் பல் மருத்துவம் மற்றும் எம்பிபிஎஸ் படித்து வரும் ஓவியா, இனியா என்ற இரு மகள்கள் உள்ளனர். குடும்பத்துடன் தற்போது கோவையில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுப்பில் தனது சொந்த ஊரான சீலையம்பட்டிக்கு இன்ஸ்பெக்டர் நடேசன் குடும்பத்துடன் வந்திருந்த போது, நேற்று வேப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் சீலையம்பட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகாலத்தில் இறந்த இன்ஸ்பெக்டர் நடேசனின் உடல் இன்று காவல்துறை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது .