கோவையில் வளர்ப்பு நாய்களுக்காக நடத்தபப்ட்ட கண்காட்சி

கண்காட்சியில் பார்னையாளர்களை கவர்ந்த நாய்கள்

Update: 2024-02-18 18:15 GMT

நாய் கண்காட்சி

கோவை மாவட்டத்தில் மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பாக இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நாய் கண்காட்சி நடைபெற்றது.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் நாய் கண்காட்சியில் தமிழக நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை,கன்னி, கோம்பை இனங்களும் மற்றும் பிற இந்திய நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு வகை நாய்களான ஜெர்மன் செப்பர்ட்,கிரேடேன்,பாக்ஸர்,புள்டாக், டால்மேசன்,கிரெடவுன், உள்ளிட்ட வகைகள் என 200 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.

இந்த கண்காட்சியில் வயது உடல் அமைப்பு, உயரம், எடை, நாய்கள் ஓடும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கண்காட்சியை நடத்தும் மான்செஸ்டர் கேனல் கிளப் நிர்வாகிகள் தனுராய் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் கூறுகையில் நாய்கள் வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் ஏற படுத்தும் வகையில் இது போன்ற கண்காட்சி நடைபெறுவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News