அருப்புக்கோட்டையில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமாரிடம் கை கொடுக்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
அருப்புக்கோட்டையில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமாரிடம் கை கொடுக்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
By : King News 24x7
Update: 2024-03-31 15:19 GMT
அருப்புக்கோட்டையில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமாரிடம் கை கொடுக்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்; முந்தி அடித்துக்கொண்டு பெண்கள் கை கொடுத்து மகிழ்ந்தனர்; நாட்டாமைய பேச சொல்லுங்க என சரத்குமாரை பேச வைத்த பெண்கள் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் புளியம்பட்டி, அமுதலிங்கேஸ்வரர் கோவில் சந்திப்பு, பாளையம்பட்டி, செம்பட்டி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அருப்புக்கோட்டையில் முதலில் புளியம்பட்டியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவருக்கு பாஜக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தில் திறந்த வேனில் நின்று பேசிய ராதிகா, நீங்கள் எல்லோரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் என்னை ஆதரிப்பீர்களா என பொதுமக்களிடம் கேட்டார். உங்களுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பேன் என உறுதியாக கூறுகிறேன் நான் இங்கு தான் இருக்கிறேன் விருதுநகரில் வீடு இருக்கிறது நீங்கள் எப்போது வேண்டுமானால் என்னை வந்து பார்க்கலாம். உங்கள் தோழியாக உங்கள் சித்தியாக உங்களுக்காக வந்து பணியாற்றுவேன். இது பாராளுமன்ற தேர்தல். பிரதமர் நரேந்திர மோடி பத்து ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல கதைகள் உள்ளது மாத்தி மாத்தி ஜெயிலுக்கு போகிறார்கள் வருகிறார்கள். மத்தி என்பது பெரிய இது அது பெரிய வட்டம். அதுக்குள்ள தமிழ்நாடு. அதற்குள்ள இந்த தொகுதி. பாஜகவை சேர்ந்த ஒரு எம்.பி அங்கு இருந்தால் எவ்வளவு வேலை சுபலமாக நடக்கும். பாரத பிரதமர் நரேந்திர மோடி வீடு கட்டும் திட்டத்திற்காக இதுவரை ரூ 122 கோடி வழங்கியுள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் உங்களை வந்து சேர ஒரு பாலம் வேண்டும். ஆனால் இங்கு இருப்பவர்கள் இதையெல்லாம் நாங்கள் தான் செய்தோம் என கூறுவார்கள். ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியிருக்கிறார்கள் ஆனால் இங்கு இருப்பவர்கள் அதில் தண்ணீர் வர வேண்டும் என்றால் ரூபாய் 2000 வேண்டும் என கேட்பார்கள். அது எல்லாம் ஏமாற்று வேலை அதற்கு ஒரு பைசா பணம் தரத் தேவையில்லை. நான் செய்து தரக்கூடிய இடத்தில் காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் என்பதே கூறவில்லை. அவர்களால் யார் பிரதமர் என கூற முடியாது. அதேபோல அதிமுகவில் இருப்பவர்கள் யாரிடம் போய் கேட்பார்கள் யாரிடமும் போய் கேட்க அவர்களுக்கு வாய்ப்பில்லை. உங்கள் வேட்பாளருக்கு திறமை இருக்கிறதா என சிந்தித்து செயல்படுங்கள். பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளராக உங்களுக்கு நல்லது செய்வேன் என உறுதியாக கூறுகிறேன். ஒரு எம்பி கூட பாஜகவில் தமிழ்நாட்டில் இல்லை இருந்த போதும் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் தீட்டப்பட்டுள்ளது இது எல்லாம் ஏன் உங்களை வந்து சேரவில்லை என நீங்கள் ஓட்டு போட்டவர்களிடம் கேட்க வேண்டும். உங்கள் பொன்னான வாக்குகளை தாமரை சின்னத்தில் அளித்து மிகப்பெரிய வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது ராதிகா பேசி முடித்தவுடன் அங்கு இருந்து கிளம்பும் தோரணையில் இருந்ததால் அங்கிருந்த பெண்கள் அனைவரும் உடனடியாக நாட்டாமையை பேச சொல்லுங்கள் என குரல் கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து சரத்குமார் பொதுமக்களிடம் பேசினார் அப்போது பேசிய அவர், நிச்சயமாக விருதுநகரில் ஒரு ஜவுளி பூங்கா வரும். நெசவுத் தொழிலுக்கு என்று ஒரு தனி வளாகம் அமைத்து அந்த நெசவுத் தொழிலை எப்படி சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம். சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு வேட்பாளராக ராதிகா சரத்குமாரை பிரதமர் நரேந்திர மோடியும் அண்ணாமலையும் அறிவித்துள்ளார்கள். எந்த ஒரு இயக்கத்திலும் இல்லாமல் முதன்முறையாக ஒரு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உங்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறார்கள் என பேசிக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு இளைஞர் மது போதையில் கத்தி கொண்டிருந்தார். அதை கேட்ட சரத்குமார் இளைஞர்களை கெடுத்து வைத்துள்ளார்கள். அவர் சரியாகத்தான் கூறுகிறார் ஆனால் 450 கரண்டில் உள்ளார். அவர் கருத்தோடு தான் பேசுகிறார் ஆனால் வேறு லெவலில் பேசுகிறார் அங்கிருப்பவர்கள் அவரை அழைத்துச் சென்று அவருக்கு ஒரு காப்பி வாங்கி கொடுங்கள் என கூறினார். பல திட்டங்கள் மத்திய அரசால் உங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது பேசி முடித்ததும் ராதிகாவும் சரத்குமாரும் வேனில் இருந்து இறங்கினர். அங்கிருந்த பெண்கள் முண்டி அடித்துக்கொண்டு ராதிகா உடனும் சரத்குமார் உடனும் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரச்சாரத்தின் போது ராதிகா சிரித்த முகத்துடனே இருந்தார்.