திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு!

தி.மு.க.வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து எ.வ.வே.கம்பன் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-11 07:37 GMT

திமுக

திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து கட்சியின் மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் நொச்சிமலை,கீழ் நாச்சிபட்டு, மலப்பாம்பாடி, நல்லான்பிள்ளை பெற்றாள் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொது மக்களுக்கு கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News