எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு!
நெடுங்குணம் கிராமத்தில் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.;
Update: 2024-04-15 16:09 GMT
வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் INDIA கூட்டணிசார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து வாக்கு சேகரிக்கப்பட்டது. திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும் நெடுங்குணம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மா.ஏழுமலை ஆகியோர் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் .இதில் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.