விருதுநகரில் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பாட ஆசிரியர்களுக்கு ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2024-02-06 06:02 GMT
சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் ஆணைக்குட்டம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் விருதுநகர் மற்றும் சிவகாசி கல்வி மாவட்டங்களில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனங்களில் கற்றல் பண்பாட்டினை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களை எளிதாக தேர்ச்சி அடையச் செய்யலாம் எனவும், அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வியில் உள்ள 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பற்றித் தெரிந்திருக்க வேண்டும் எனவும், வேளாண்மை,

மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கு செல்லவேண்டுமென்றால் எத்தனை சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் போன்ற தகவல்களை ஆசிரியர்களும் அறிந்து கொண்டு, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அனைத்து அரசுப்பள்ளியில் இருந்தும் உயர்கல்வியில் உள்ள 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் தேர்ச்சி பெற முனைப்புடன் செயல்பட வேண்டும்.

எனவும், மேலும், தொடர்ச்சியாக வரும் கல்வியாண்டில் 100 சதவிகித தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News