வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு!
புதுக்கோட்டையில் அரசு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு.;
Update: 2024-03-15 06:04 GMT
ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா
புதுக்கோட்டை நகராட்சி கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ அமைப்பில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.