பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆட்சியர் பழனி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-03-01 08:28 GMT

தேர்வு மையத்தில் ஆட்சியர் பழனி 

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 21879 மாணவ, மாணவியர்கள் தேர்வினை இன்று எழுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று (1.03.2024) முதல் தொடங்கப்பட்டு 22.03.2024 வரையில் நடைபெறவுள்ளது.

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 104 தேர்வு மையங்களில் 195 பள்ளிகளைச் சேர்ந்த 10559 மாணவர்களும், 11320 மாணவிகள் என மொத்தம் 21879 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வுகள் 4.03.2024 முதல் 25.03.2024 வரை நடைபெறவுள்ளது.

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 104 தேர்வு மையங்களில், 10843 மாணவர்களும், 11322 மாணவியர்கள் என மொத்தம் 22165 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். தொடர்ந்து 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் 26.03.2024 முதல் 8.04.2024 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 68 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 126 தேர்வு மையங்களில், 25219 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத சலுகை பெற்ற மாணவர்கள், மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு பெற்ற மாணவர்கள், கண்பார்வை குறைபாடு, செவித்திறன் குறைவு, நரம்பியல் கோளாறு உடைய மாணவர்கள், மாற்றுதிறனாளி மாணவர்கள் என 145பேர் சொல்வதை தேர்வு எழுத அலுவலர்க்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தேர்விற்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 105 துறை அலுவலர்கள், 28 வழித்தட அலுவலர்கள், 94 பறக்கும்படை, 1737 அறை கண்காணிப்பாளர்கள், 145 சொல்வதை எழுதுபவர்கள், 240 அலுவலக பணியாளர்கள் என தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலவலக பணியாளர்கள் என மெத்தம் 2459 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுத்தேர்வின் தேர்வுப்பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக துணை இயக்குநர் ஆசிரியர் தேர்வு வாரியம் ராமன் தலைமையில் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் வருவாய்துறை அலுவலர்கள், பறக்கும்படை அமைக்கப்பட்டு தேர்வர்கள் ஒழுங்கீச் செயல்பாடுகளில் ஈடுபடா வண்ணம் கண்காணிக்கப்பட உள்ளனர்.

மேலும் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாட்கள் கொண்டு செல்லவும், தேர்வு நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதி, மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்விற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News