சேலத்தில் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சேலத்தில் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெள்ளிக்கொலுசு உற்பத்தி நிறுவனங்களில் அடிக்கடி சோதனை நடத்தி வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் பிருந்தாதேவியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பேரில் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஜி.எஸ்.டி. அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகநாதன், சிவசுப்பிரமணியபிள்ளை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லட்சுமி,
மயில், மாறன், வேடியப்பன், முருகன், கணேஷ், தனி தாசில்தார் (தேர்தல்) முருகேசன், வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன், செயலாளர் முனியப்பன் மற்றும் செவ்வாய்பேட்டை வெள்ளிக்கொலுசு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.