அரியலூரில் குழந்தைகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல்
அரியலூரில் பி.எம் கேர்ஸ் திட்டத்தில் பயனடைந்த குழந்தைகளுடன் ஆட்சியர் கலந்துரையாடினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-20 15:55 GMT
மாவட்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு, பெற்றோர்களை இழந்த ஒரு பெண் குழந்தைக்கு PM கேர்ஸ் திட்டத்தில் 10 லட்ச ரூபாய்கான அஞ்சலக சேமிப்பு புத்தகத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்.
பின்னர் PM கேர்ஸ் திட்டத்தில் பயனடைந்த 5 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். மேலும் குழந்தைகளின் தற்போதைய சூழ்நிலை, அவர்கள் கல்வி பயிலும் வகுப்பு குறித்தும், குடும்ப சூழலில் வளரும் பராமரிப்பு குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.