பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கினார் மாவட்ட ஆட்சித் தலைவர்

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-14 01:48 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் வேலூர் VIT நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம் இணைந்து நடத்தும் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கி பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது பின்னர் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பாராட்டிய சால்வை அணிவித்து ஊக்குவித்தார் குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் அஸ்ஸாம், புதுடெல்லி, மேற்கு வங்காளம், குஜராத், கர்நாடக, ஆந்திர, கேரள மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதங்களில் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்..

Tags:    

Similar News