திமுக வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் டி.ஆர் பாலு வெற்றி சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார்.

Update: 2024-06-05 09:37 GMT

திமுக வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

18 வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று கடந்த 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 இன்று நடைபெற்றது. அதன்படி திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர் பாலு 761551 வாக்குகளும், அதிமுக சார்பில் பிரேம்குமார் 272615 வாக்குகளும், பாஜக கூட்டணி சார்பாக தமாக 211149 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவிச்சந்திரன் 140497 வாக்குகளும் பெற்றனர் இறுதியாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட 488936 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் டி .ஆர்.பாலு வெற்றி பெற்றார்.

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் 3 வது முறையாக தற்போது வெற்றி பெற்றார் டி.ஆர் பாலு வெற்றி வெற்றி பெற்ற டி ஆர் பாலுக்கு திருப்பெரும்புதூர் தேர்தல் அலுவலர் அபிஷேக் சந்திரா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருண் ராஜ் வெற்றி பெற்ற சான்றிதழ்களை டி .ஆர் பாலுவிடம் வழங்கினர்.

இந்த திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் டி.ஆர் பாலு வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை தவிர போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சியினர் உட்பட 29 வேட்பாளர்கள் டெப்பாசிட் தொகையை இழந்தனர்.

Tags:    

Similar News