மீசலூர் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட வீட்டினை திறந்து வைத்த ஆட்சியர்

மீசலூர் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

Update: 2024-06-28 14:17 GMT
மீசலூர் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மீசலூர் கிராமத்தில், வசிக்கும் மாற்றுத்திறனாளி மாரியப்பன் என்பவர் தான் வசிக்கும் வீடு மிகவும் சேதமடைந்து, வசிக்க முடியாத நிலையில் உள்ளதால் வீட்டினை சீரமைக்க உதவிடுமாறு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்ததன் பேரில்,

அவரது மனுவின் உண்மைத்தன்மை குறித்து பரிசீலனை செய்து, அவரது குடும்பத்திற்கு சிவகாசி லவ்லி கார்ட்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News