ஏரி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
துறைமங்கலம் பெரிய ஏரி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கற்பகம், மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
துறைமங்கலம் பெரிய ஏரி தூர்வாரும் பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவு பெரம்பலூர் துறைமங்கலம் பெரிய ஏரியின் வலது பக்க கரையை பலப்படுத்தும் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தூர்வாரப்பட்டு வருவதைப் பார்வையிட்டார் அப்போது ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மழைக்காலம் வருவதற்குள் ஏரி முழுவதும் தூர்வாரப்பட்டிருக்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த ஏரிக்குள் கழிவு நீர் கலக்கும் வகையில் குழாய்கள் அமைக்கபட்டிருந்தால் அவற்றை உடனியாக அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் பாண்டியராஜன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.