பருவதனஅள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பருவதனஅள்ளி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதி உள்ளதா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-04-19 03:00 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட பருவதன அள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்தும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப் பதற்கு ஏதுவாக சாய்வு தளம் மற்றும் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும் நேரடியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் சாந்தி ஐஏஎஸ் நேற்று மாலை ஆய்வு செய்தார். உடன் தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பாளர்கள் நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.