குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் துவக்க விழா நடைபெற்ற நிலையில் கலெக்டர் குழித்துறை அரசு ஆஸ்பத்தி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-01 06:54 GMT
உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டமானது ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன்படி இன்று புதன்கிழமை இந்த திட்டத்தின் தொடக்க விழா நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், திட்ட அதிகாரி பாபு ,இணை மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி, முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டபாணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார். குழித்துறை ஆஸ்பத்திரி சென்றவர் அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு ஒரு சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, களியக்காவிளை ஆரம்ப சுகாதார நிலையம், மேக் கோடு ரேஷன் கடை, திக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்க்கொண்டார்.