வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார். ;
Update: 2024-04-10 01:10 GMT
ஆட்சியர் ஆய்வு
பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி நேற்று (08.04.2024) பார்வையிட்டார். உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.