வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு!
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு செய்தனர்.
Update: 2024-04-16 16:17 GMT
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு வாலாஜா மற்றும் ஆற்காடு தாலுகா அலுவலகங்களில் ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள 127 தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக பிரிக்கும் பணி நடைபெற்றது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் அனைத்தையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.முன்னதாக, வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் அறையில் நடைபெற்ற பணிகளையும், 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையக் கட்டிடங்கள் மற்றும் கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளில் மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூடுதல் எஸ்பி குமார், குணசேகரன், சரவணன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனோன்மணி, ஏகாம்பரம், வெங்கடேசன், அருளரசன், ஜெயக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.