வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-05-21 13:53 GMT
தர்மபுரி மாவட்டத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு பதிவு முடிவடைந்து செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப. பார்வையிட்டார். மேலும் வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை அடுத்து தபால் ஓட்டு பிரிக்கும் பணிகள்,மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் உடன் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளனர்.