மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
Update: 2024-04-16 16:06 GMT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பொதுப்பணித்துறை மூலமாக சட்டமன்ற பிரிவு வாரியாக தடுப்புப் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து போட்டியிடும் வேட்பாளர்களின் முன்னிலையில் இன்று (16.04.2024) திறந்து வைக்கப்பட்டது. அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.