வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
Update: 2024-06-07 16:07 GMT
திருவாரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்.
வடகரை ஊராட்சியில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளதையும், ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் வடகரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் மினி சுகாதார வள மையம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.