கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை ஆட்சியர் ஆய்வு !
கரூரில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-21 07:18 GMT
கரூரில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் வெள்ளை கோடு வரைந்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினரை காவல்துறையினர் சோதனைக்கு பின்னரே ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ளே அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள அறையை, இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அனைவர் முன்னிலையில் பரிசோதனை செய்த பிறகு, சீல் வைத்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாகனம் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தனர்.