வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு
கரூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும், கரூர் மாவட்டம், தளவாய் பாளையம் பகுதியில் செயல்படும் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் இன்று தளவாய் பாளையம், குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிலமெடுப்பு பிரிவில் பணியாற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ், கட்டடங்கள் கட்டும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.