அரசு விடுதிகளில் சேர மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு !

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம், மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவித்துள்ளார்.

Update: 2024-06-12 06:51 GMT

ஆட்சியர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம், மாவட்ட ஆட்சியர் கற்பகம், அழைப்பு. பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 16 விடுதிகளும், மாணவர்களுக்கு 10 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு 4 விடுதிகளும், மாணவிகளுக்கு 6 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றது. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மணவ, மாணவியர்களும் சேரத்தகுதியுடையவர்கள் ஆவர்.

அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் உணவும் தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 14ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு -ஜூலை 15 ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் சேர்ந்து அரசின் இச்சலுகைகைளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News