கஞ்சா விற்பனை கும்பலுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தாலோ கடத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் போதைப் பொருள்களை ஒழித்தல் மற்றும் தடுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, மேற்படி குழுவின் செயல்பாடுகள் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி / நகராட்சி / வட்டார அளவிலான ஆய்வுக்குழுக்கள் அமைத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குனர், கல்லுாரி கல்வி இயக்ககம், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர் (மருத்துவம்), மண்டல இயக்குனர் நகராட்சி நிருவாகம், உணவுப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மருந்து ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிகளில் போதைப்பொருள் இல்லா வளாகத்தினை (100% Drug Free Campus) உறுதி செய்திட, போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலர்கள் கொண்ட குழுவால் பள்ளிகளில் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் தங்கள் பகுதியில் குடிப்பழக்கத்தினாலும் மற்ற போதைப் பழக்கத்தினாலும் பாதிக்கப்பட்டு அடிமையானவர்களை குடிப்பழக்கத்திலிருந்தும், போதை பழக்கத்திலிருந்தும் மீட்கும் பொருட்டு அரசு போதை ஒழிப்பு மையங்களில் சிகிச்சை பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அவ்வாறான நபர்களைக் கண்டறிந்து மேற்படி அரசு போதை ஒழிப்பு மையத்தில் சேர்ப்பதற்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் போதைப் பொருள்கள் தொடர்பான புகார்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்தினரால் 9443967578 மற்றும் 9042738739 ஆகிய வாட்ஸ் ஆப் எண்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, மேற்படி தொடர்பு எண்கள் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மகளிர் திட்டத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறையினர் மூலமாக பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது மக்கள் என விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இடங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்டவாறான போதைப்பொருள் ஒழித்தல் மற்றும் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதே சமயம் போதைப்பொருள்களை விற்பனை செய்தல், கடத்துதல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர்களின் மீது கீழ்கண்டவாறான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .