உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனைக்கூட்டம் !!
செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-29 07:08 GMT
ஆலோசனைக்கூட்டம்
தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 ஜூன் 04 அன்று நடைபெறுவதை முன்னிட்டு இன்று செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி அரங்கில் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வின் போது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதின் இப்ராகிம்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம்.வளர்ச்சி துறை அலுவவர்கள், காவல் துறை அலுவகர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.