புதிய பேருந்தை துவக்கி வைத்த கலெக்டர், எம் எல் ஏ

செங்கல்பட்டு - தாம்பரம் புதிய பேருந்து சேவையை ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசுதனன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.;

Update: 2024-01-23 07:22 GMT
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசுதனன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் ,உடன் உதவி ஆட்சியர், சார் ஆட்சியர், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ் ,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ,வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்பேருந்து செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வழியாக திருக்கச்சூர் கேட் வழியாக தாம்பரம் சென்றடைகிறது.
Tags:    

Similar News