கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-07-04 09:25 GMT

கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை:- தோட்டக்கலை துறையின் கீழ் 2024 – 25-ஆம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.51,23,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தென்னை பரப்பு விரிவாக்கத்தின் கீழ் 150 எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.18,00,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு எக்டருக்கு 50% மானியமாக ரூ.12000/- வீதம் தென்னங்கன்றுகள், ஊடுபயிராக தட்டைபயறு விதைகள் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.   ஒரு விவசாயி அதிக பட்சமாக இரண்டு எக்டர் வரை பயன்பெறலாம். பாரம்பரிய காய்கறிகளின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் 15 எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.3,00,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு எக்டருக்கு 40% மானியமாக ரூ.20,000/- வீதம் ஆண்டார்குளம் கத்தரி அல்லது சாம்பார் மிளகாய் நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படும்.        ஒரு விவசாயி அதிக பட்சமாக இரண்டு எக்டர் வரை பயன்பெறலாம். வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக மாடித் தோட்டத் தளைகள் விநியோகம் இனத்தின் கீழ் 300 எண்கள் இலக்கு பெறப்பட்டு ரூ.1,35,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிக பட்சமாக இரண்டு தொகுப்புகள் வரை பெற முடியும். ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900/- அதில் 50% மானியம் ரூ.450/- மற்றும் பயனாளியின் பங்குத் தொகை ரூ.450/- ஆகும்.       பல்லாண்டு தோட்டக்கலைப் பயிர்களில் காய்கறிகள் ஊடுபயிர் சாகுபடி இனத்தின் கீழ் 12 எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.96,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டர் வரை வழங்கப்படும். ஒரு எக்டருக்கு மானியம்    ரூ. 8,000/- ஆகும்.தென்னையில் ஜாதிக்காய் ஊடுபயிர் சாகுபடி இனத்தின் கீழ் 50 எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.5,00,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பங்களில் தோட்டம் அமைத்தல் இனத்தின் கீழ் 4 எண்கள் இலக்கு பெறப்பட்டு ரூ.32,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  இத்திட்டங்களில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே மானியங்கள் பெற முடியும் . இதற்காக (https://www.tnhorticulture.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
Tags:    

Similar News