கள்ளப்பெரம்பூர் ஏரியினை ஆய்வு செய்த தஞ்சை ஆட்சியர்

கள்ளப்பெரம்பூர் வெண்ணாறு தலைப்பு இடையே தார்ச்சாலை அமைக்கும் பணிகளாய் ஆய்வு செய்ததோடு மக்களுடன் திட்ட முகாமையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்

Update: 2023-12-27 03:30 GMT

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், கள்ளப்பெரம்பூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கள்ளப்பெரம்பூர் 1 ஆம் சேத்தியில் ரூ.42.12 லட்சம் மதிப்பில் கள்ளப்பெரம்பூர் வெண்ணாறு தலைப்பு இடையே தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இனாத்துக்கான் ஊராட்சி இராவுசாப்பட்டியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை விபரங்களை கேட்டறிந்தார். 

முகாமில் தங்கள் கோரிக்கையினை பதிவு செய்து விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டுக் கொண்டார். இராவுசாப்பட்டியில் பொதுவிநியோகத்திட்ட அங்காடியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் கள்ளப்பெரம்பூர்-2 ஆம் சேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர்  வட்டாட்சியர் அருள்ராஜ், ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் டி.அருளானந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News