வாகன சோதனையை தீவிர படுத்த ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபடும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் முறையாக சோதனை செய்கின்றனரா என்பது குறித்து அலுவலர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-04-04 14:21 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தபட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 54 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 54 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வேட்பாளர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பண பரிமாற்றத்தை தடுக்க வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது மாவட்ட முழுவதும் இதுவரை ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சுமார் 34 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று குறுக்குசாலை பகுதியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை முறையாக செய்கின்றனரா என்பது குறித்து நேரடியாக ஆய்வு செய்ததுடன் வாகன சோதனையை தீவிர படுத்தவும் உத்தரவிட்டார்.