தேசிய கொடி ஏற்றிய ஆட்சியர் சரயு

கிருஷ்ணகிரியில் நடந்த 75வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, காவல் துறையினர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Update: 2024-01-26 05:55 GMT
 கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர இந்தியாவின் 75 - வது குடியரசு தின விழா நடைப்பெற்றது, இந்த விழாவில் கலந்துக் கொண்ட ஆட்சியர்  சரயு தேசிய கொடியை பறக்க விட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த வேனில் சென்று காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களையும் ஆட்சியர் பறக்க விட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை பொன்னாடை போர்த்தி கொளரவித்தார், பின்னர், முன்னாள் படைவீரர் நலத் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை உள்ளிட்ட 5 துறைகளின் சார்பில் 27 பயனாளிகளுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் , 28 துறைகளின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 181 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Tags:    

Similar News