அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கலெக்டர் சுவாமி தரிசனம்
Update: 2023-11-14 05:34 GMT
குடும்பத்துடன் கலெக்டர் சாமி தரிசனம்
ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கலெக்டர் ஷ்ரவன்குமார், அவரது மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கலெக்டருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மூலவர் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்த பிறகு, கோவில் வளாகத்தில் உள்ள இசைத்துாணை கல்லால் தட்டி சத்தத்தை கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள யாழி சிலையை பார்வையிட்டார்.