சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை கலெக்டர் பார்வை

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை பகுதியில் மகளிர் விவசாய தயாரிக்கும் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Update: 2024-05-03 09:19 GMT

மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட போது

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் திருவட்டார் மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் திருவரம்பு வாழைநார் கைவினைபொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் ,

இக்கூட்டமைப்பில் 22 கிராமங்களை சேர்ந்த 300 பழங்குடியின மகளிர் உறுப்பினர்களாக சேர்ந்து திருவட்டார் மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தினை ஆரம்பித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். குக்கிராமங்களில் விளையும் நல்லமிளகு, கஸ்தூரி மஞ்சள், புளி, கிராம்பு, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்பு (நவரபச்சிலை, குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை) உள்ளிட்ட மூலிகை பொருட்களை கொண்டு) போன்ற அனைத்து பொருட்களும் பழங்குடி விவசாயபெண் மகளிரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இயற்கையில் முறையில் தயாரிக்கப்பட்ட சோப்பினால் தோல் சம்மந்தமான அனைத்து வியாதிகளுக்கும் தீர்வு காணப்படுகிறது.

மேலும் திருவரம்பு கொல்வேல் பகுதியில் கார்மல் அன்னை சுயஉதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்டுவரும் வாழைநார் கைவினைப்பொருட்கள் தயாரிப்புக்களை நேரில் பார்வையிடப்பட்டது. மேலும் திருவட்டார் மகளிர் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் திருவரம்பு சுயஉதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களை உள்வட்டாரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பழங்குடியின மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஸ்டாட்ஆப் நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பீபீ ஜான், சுயஉதவிக்குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News