பள்ளி மாணவர்கள் சுற்றுலா - கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

Update: 2023-12-03 11:03 GMT
மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக சுற்றுலா தினம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் சுற்றுலா பயணத்தை வேலூர் கோட்டையிலிருந்து   மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன்,கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் விடுதி மாணவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாக 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இம்மாணவர்கள் வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூரில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், வேலூர் கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு  சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இச்சுற்றுலா பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு, காலை மாலை ஆகிய நேரங்களில் தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News