தேர்தல் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2024-04-14 15:05 GMT
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறும், அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் எனவும், ஊடக மையத்திற்கான வசதிகள், கட்டுப்பாட்டு அறைக்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொதுப்பணித்துறை பொறியாளர் (கட்டிடம்) ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News