மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்..
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
By : King 24x7 Website
Update: 2024-01-23 05:37 GMT
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்! நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 318 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் காதப்பள்ளியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி வசந்தா சக்கர நாற்காலி வேண்டி அளித்த மனுவின் அடிப்படையில் உடனடியாக ரூ.6,840 மதிப்பில் சக்கர நாற்காலியை வழங்கினார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.