சேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

சேலத்தில் நடந்த விழாவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ரூ.12 லட்சம் நிதி உதவிகளை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.

Update: 2024-03-08 11:39 GMT


சேலத்தில் நடந்த விழாவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ரூ.12 லட்சம் நிதி உதவிகளை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.


வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் தொழில் மேம்பாட்டிற்கான சேவைகள் வழங்கும் மதி சிறகுகள் தொழில் மையம் குறித்த விளம்பர பதாகை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி விளம்பர பதாகையை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மகளிரின் தொழில்களை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டமானது ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சங்ககிரி, ஆத்தூர் ஆகிய 7 தாலுகாக்களில் 154 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மதி சிறகுகள் என்ற தொழில்களுக்கான சேவை மையம் கலெக்டர் அலுவலகம், வீரபாண்டி ஒன்றிய பொது சேவை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்த மையத்தின் மூலம் மகளிர், இளைஞர்கள், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடர்பாடுகள், தடைகள் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் மேம்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் 'மதி சிறகுகள்' தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறவும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் விசைத்தறி அமைப்பதற்காக 3 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 36 ஆயிரம் கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News