டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆரம்பாக்கம் கிராம மக்கள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2024-03-21 10:17 GMT

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆரம்பாக்கம் கிராம மக்கள் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடினர். ஆரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையால், மதுபிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக குற்றஞ்சாட்டினர். திடீரென, கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற கிராமத்தினர், கலெக்டர் அலுவலக அறை முன்பாக குவிந்தனர்.

அங்கு ஒரு மணி நேரமாக முற்றுகை போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என்றால், ஆரம்பாக்கம் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு செய்வோர் எனவும் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News