வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பயணம்!
வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பயணம்.;
Update: 2024-05-18 10:58 GMT
வேளாண்மை கல்லூரி மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திலுள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை வேளாண் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராம வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆதனக்கோட்டை கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஆதனக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர். இதில் அவ்வூர் மக்கள் ஆர்வமுடன் தங்கள் கால்நடைகளுடன் வந்து முகாமில் பங்கேற்றனர் . மருத்துவர் திருமதி கமல தேவி அவர்களின் முன்னிலையில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இதில் J.ஜெமிலா ரோஸ்லின் ,M. கமலி பிரியா, N.கனிஷ்கா ஈஸ்வரி,V. காயத்ரி, R.கீர்த்தனா,V. கீர்த்தி, D.லாவண்யா,S. லாவண்யா,K.மானசா,S. மனசா, V.மஞ்சுளா ஆகியோர் கொண்ட குழு மாணவிகள் முகாமை நடத்தினர்.