வேளாண்மை கல்லுாரி மாணவிகள் களப்பயணம்!

குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் அறந்தாங்கி அருகே சிலட்டூர் மற்றும் மன்னகுடி கிராமத்தில் களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-05-21 04:58 GMT

குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் அறந்தாங்கி அருகே சிலட்டூர் மற்றும் மன்னகுடி கிராமத்தில் களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அறந்தாங்கி குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் படித்து வரும் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் அறந்தாங்கி கீழ் அருகே சிலட்டூர் மற்றும் மன்னகுடி கிராமத்தில் களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகள் குழுவை டாக்டர்கள் குமணன், விஜயலட்சுமி, மஹேந் திரகுமார், முத்துக்குமார் ஆகியோர் வழிநடத்தினர். சிலட்டூர், மங்கள நாடு, மன்னக்குடி மற் றும் அழியாநிலை கிராமத்தில் முகாமிட்டு தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துதல், காண்டாமிருக வண்டுக்கு வாழிப் பொறி, கரையான் தொல் லைக்கு தீர்வு, நெல்லில் விதை நேர்த்தி, பழ ஈ பொறி, உழவன் செயலி பதிவிறக்கம், மாடித் தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
Tags:    

Similar News