தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-18 12:36 GMT
தற்கொலை
தூத்துக்குடி நிகிலேசன் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ஜனனி பவிஷ்யா (19), தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவர் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.