வயிற்று வலியால் அவதிப்பட்ட கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
வயிற்று வலியால் அவதிப்பட்ட கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-02-15 11:18 GMT
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர், இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் மனைவி லட்சுமி. இவரது மகள் மெகா வயது 19. இவர் தளவாய் பாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பி டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவரது தந்தை அண்மையில் காலமானார். மேலும், கடந்த ஒரு வருட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் மெகா. இதனால் விரக்தி அடைந்த நிலையில் கல்லூரிக்கு சென்று வந்த மெகா, பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 8 மணியிலிருந்து 8:30- மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த மாணவியின் தாயார் லட்சுமி, இதுகுறித்து தாந்தோணி மலை காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த கல்லூரி மாணவி மெகாவின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.