சிங்கபெருமாள் கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சிங்கபெருமாள் கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-03-18 14:31 GMT
காவல் நிலையம் 

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு பகுதியில். வசித்து வருபவர் பாபு. இவர் கராத்தே மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் இவரது மகள் ரக்க்ஷினி( வயது 20) இவர் தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெளியே செல்வதற்கு தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார்.. தந்தை மருத்துள்ளார்.அதையும் மீறி மகள் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதன் காரணமாக தந்தை மகளிடம் கடந்த இரண்டு நாட்களாக பேசாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகள் ரக்க்ஷினி வீட்டின் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்பு இது குறித்து பாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News