அரசுப் பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி
விபத்து குறித்து மாணவர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-22 01:25 GMT
அரசு பேருந்து மோதி மாணவன் பலி
சேலம் கான்வென்ட் சாலை ஏழுமலை நகரில், மொ்சி குடில் பகுதியில் வசிக்கும் மெல்வின் ஜோசப் என்பவரின் மகன் அபிஸ்வா லியோனாா்ட் (20). சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரி மாணவரான இவா், சேலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் முசிறி அருகேயுள்ள உமையாள்புரம் பகுதியில் வந்தபோது, எதிரேவந்த அரசுப் பேருந்து மோதியதில் இறந்தாா். தகவல் அறிந்த முசிறி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.