சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி
செக்கானூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-01-21 07:10 GMT
நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை
மேட்டூர் அருகே நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் அப்புசாமி(48). இவரது மகன் அரவிந்த்(22) திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அரவிந்த் கல்லூரி முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். செக்கானூர் அருகே வந்த போது இவரது மோட்டார் சைக்கிள் மீது காய்கறி பாரம் ஏற்றி வந்த லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் சடத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.