கல்லூரி வாகனம் மரத்தின் மீது மோதி விபத்து - 8 பேர் காயம்
Update: 2023-11-22 09:59 GMT
விபத்துக்குள்ளான கல்லூரி வாகனம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அம்மாபாளையம் ஜாலி காடு பிரிவு ரோடு தசரதன் தோட்டத்தின் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து அ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்